Wonders of Nature

Wonders of Nature

இயற்கை அழகு
---------------
இயற்கையைக் கொஞ்சம் ரசிப்போமே!
இயற்கையைக் கொஞ்சம் ரசிப்போமே!
இயந்திர உலகை சற்றே தவிர்த்து
இயற்கையைக் கொஞ்சம் ரசிப்போமே!
 
வானை முட்டும் மலை முகடு
வந்து படியும் மேகக்கூட்டம்
மடுவில் பாயும் நீரோடை
மலைப் பாம்பெனவே நெளிந்தோடும்
 
அருகே அடர்த்திக் காடுகளாம்
அதனின் ஊடே ஒளிக்கதிராம்
மலரென மயக்கும் மர இலைகள்
மருண்டு ஓடும் மான் கூட்டம்
 
பச்சைப் பசேலென பாய் விரித்து
படுத்து உறங்கும் நில மங்கை
வண்ணப் பூக்களால் கோலமிடும்
வாரியிறைத்த புல் பூண்டு
 
கீச்கீச் என்று இசை எழுப்பும்
கிளைகள் தாவும் புள்ளினங்கள்
புள்ளின இசைக்கு சுருதி கூட்டும்
பூ வண்டுகளின் ரீங்காரம்
 
இயற்கை எழிலில் மனம் லயித்து
இனிய புத்துணர்வு பெற்றிடுவோம்
இதய நோயை விரட்டிடுவோம்
இறைவனுக்கு நன்றி கூறிடுவோம்
 
--திலகவதி முத்துராமன் (NJ)
  அரிமழம்

Related links

© All Rights Reserved Nagarathar Sangam of North America