Michigan Tamil Sangam
மிச்சிகன் தமிழ் சங்கம் மார்ச் 20௦௦ ஆம் தேதி "தமிழ் மாலை" நிகழ்ச்சிகளை பார்மிங்டன் நூலகத்தில் சிறப்பாக நடத்தியது. இதில் சிறுவர் மற்றும் சிறுமியருக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, பேச்சு போட்டி நடைபெற்றது. எழுபதுக்கும் மேற்ப்பட்ட குழந்தைகள் பங்குபெற்றனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மிகவும் ஆர்வத்துடன் தயார் செய்திருந்தனர். நான்கு வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஒரு குறளும், ஐந்து முதல் எட்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் இரண்டு திருக்குறளும், ஒன்பது முதல் பன்னிரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் இரண்டு குறள் மற்றும் ஒரு குறளுக்கு விளக்கமும், பதிமூன்று வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் முன்று குறள் மற்றும் இரண்டு குறளுக்கு விளக்கமும் கொடுத்து கேட்பவரை மகிழ்ச்சிக்குள்ளாக்கினர்.
வள்ளுவனின்
"குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்" என்ற வாக்கிற்கேற்ப, மழலைகளின் குரலில் திருக்குறளை கேட்டது செவிக்கும் மனதிற்கும் தெவிட்டாத தேனாக இருந்தது. ஒன்பது வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் "தமிழ்" அல்லது "தேசிய தலைவர்கள்" என்ற தலைப்புகளில் இரண்டு முதல் நான்கு நிமிடத்திற்கு சிறப்பாக பேசினர். "தேசிய தலைவர்கள்" தலைப்பில் அனைத்து குழந்தைகளும் இந்திய தலைவர்களை பற்றி பேசியது பெற்றோருக்கு உள்ள தாய் நாட்டுப்பற்றை பறைசாற்றியது. இந்நிகழ்ச்சியில் பதினெட்டு வயத்திற்கு மேற்ப்பட்டோருக்கான கவியரங்க போட்டியில் "வீரம்" அல்லது "காதல்" என்ற தலைப்பில் பலர் கவிபாடினர்.
போட்டிகளில் பங்கேற்ற நகரத்தார் குழந்தைகள்.
நான்கு வயதிற்கு உட்பட்டோர்: அகிலா விவேக், விசாலாக்ஷி மெய்யப்பன், ஷ்யாம் ஆறுமுகம், சுப்பு முத்தையா ,அருண் நாகப்பன், ஸ்ரீதேவி சுவாமிநாதன்
ஐந்து முதல் எட்டு வயதிற்கு உட்பட்டோர்: ஷ்ருதி சேவுகன்,நியதி மணிவண்ணன்.
ஒன்பது வயத்திற்கு மேற்பட்டோர்: கார்த்திக் நாகப்பன்
கவியரங்கத்தில் பங்குபெற்றோர்: "காதல்" என்ற தலைப்பில்: விஜி நாகப்பன், அபிராமி சுவாமிநாதன்.

.png)
